இசையும் காதலும் இணைந்தது..! - ரோஷினி மற்றும் சுந்தர மூர்த்தி எளிய திருமணம்..!
Music and love combined Roshini and Sundara Murthy simple wedding
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் வீடு தோறும் ரசிகர்களை ஈர்த்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் காலடி வைத்துள்ளார். அவருக்கு நேற்று எளிமையும் ஆனந்தமும் கலந்த திருமணம் நடைபெற்றது.

இசையமைப்பாளரான 'சுந்தர மூர்த்தி'-யை ரோஷினி கரம்பிடித்தார். மேலும்,நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த திருமணம் எளிமையானதாகவும், மனம் நிறைந்த தருணங்களோடும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி,திரைப்பட உலகில் தனித்துவமான பின்னணி இசைக்காக அறியப்படும் சுந்தர மூர்த்தி, ஐரா, தண்டட்டி, பொம்மை நாயகி,டென் ஹவர்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் கவனம் பெற்றவர்.
அதுமட்டுமின்றி,சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குத் தன்னம்பிக்கையுடன் பயணம் மேற்கொண்டு வரும் ரோஷினி, கருடன், தலைவன் தலைவி, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்த ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் தற்போது குவிந்து வருகின்றன.
English Summary
Music and love combined Roshini and Sundara Murthy simple wedding