சென்னையில் தங்கம் ‘ரோலர் கோஸ்டர்’ விலை..! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன...? - Seithipunal
Seithipunal


தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி காணப்பட்டு, நகை வாங்க நினைப்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை சந்தையில் தங்கம் ‘ரோலர் கோஸ்டர்’ போன்று தினமும் புதிய மாற்றங்களை பதிவு செய்து வருகிறது.

கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு பவுன் தங்கம் அதிகபட்சமாக ரூ.1,34,400 என்ற உச்சத்தைத் தொட்டது. அதன் பின்னர் விலை சுமார் ரூ.20,000 வரை சரிந்து, தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.

2-ந்தேதி விலை ரூ.1,11,600 ஆக குறைந்த நிலையில், 3-ந்தேதி ரூ.1,14,160 ஆக உயர்ந்தது. 4-ந்தேதி மேலும் ஏறி ரூ.1,19,200 ஆகியது. ஆனால் 5-ந்தேதி மீண்டும் சரிந்து ரூ.1,14,560-க்கும், 6-ந்தேதி ரூ.1,14,000-க்கும் தாழ்ந்தது.அதன்பின் 7-ந்தேதி ரூ.1,15,360 ஆகவும், 9-ந்தேதி ரூ.1,17,200 ஆகவும் உயர்வு கண்டது.

10-ந்தேதி ரூ.1,16,640 ஆக குறைந்த நிலையில், 11-ந்தேதி மீண்டும் ரூ.1,18,320 என ஏற்றம் கண்டது. 12-ந்தேதி ரூ.1,16,800 ஆகவும், 13-ந்தேதி ரூ.1,15,200 ஆகவும் சரிந்தது.14-ந்தேதி விலை சற்றே உயர்ந்து ரூ.1,16,480 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நேற்று அதே விலை நீடித்த நிலையில், இன்று மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.1,15,520-க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் ரூ.960 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிராம் விலையிலும் மாற்றம் பதிவாகியுள்ளது. நேற்று ரூ.14,560 இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ரூ.120 குறைந்து ரூ.14,440-க்கு விற்பனையாகிறது.இதேவேளை, வெள்ளி விலை கடந்த நான்கு நாட்களாக மாற்றமின்றி நிலைத்திருக்கிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.280-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனையாகி வருகிறது.மொத்தத்தில், தங்க சந்தையின் இந்த தினசரி ஏற்ற இறக்கங்கள் முதலீட்டாளர்களையும் நகை வாங்குபவர்களையும் கவனமாக இருக்கச் செய்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold roller coaster price Chennai What current gold and silver price situation


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->