“100 ரூபாய்க்காக எல்லோர்முன்னாலும் டான்ஸ் ஆடியிருக்கேன்” – னம் நொந்து பேசிய யாஷிகா ஆனந்த்! - Seithipunal
Seithipunal


மாடலிங் உலகில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமான அவர், பின்னர் பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது அவர் பகிர்ந்திருக்கும் ஒரு சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியை பூர்வீகமாக கொண்ட பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த யாஷிகா, பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்து, பின்னர் குடும்பத்துடன் சென்னை குடிபெயர்ந்தார். கல்லூரி படிப்பை சென்னையில் முடித்த அவர், மாடலிங்கில் ஆர்வம் கொண்டு விளம்பரங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் ரஹ்மான் நடித்த துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் மூலம் கவனம் பெற்றார். அதன் பின் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நாயகியாக நடித்தார். தொடர்ந்து மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, பெஸ்டி போன்ற படங்களில் நடித்தார். இருந்தாலும், தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என அவர் முன்பு வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவரது பிரபலத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது பிக் பாஸ் சீசன் 2. அந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். டைட்டிலை வெல்லாவிட்டாலும், 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

இந்நிலையில், வாழ்க்கையில் ஏற்பட்ட கார் விபத்து அவருக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அந்த விபத்தில் தனது நெருங்கிய தோழியை இழந்தார். பல மாதங்கள் சிகிச்சை பெற்று மீண்ட அவர், தற்போது மீண்டும் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி வருகிறார்.

சமீபத்தில் சமூக வலைதளத்தில் பேசிய யாஷிகா, தனது சிறுவயது அனுபவத்தை பகிர்ந்தார். “எனக்கு சுமார் பத்து வயது இருக்கும். 100 ரூபாய் கிடைக்க வேண்டும் என்பதற்காக அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் முன்பும் லூசுத்தனமாக டான்ஸ் ஆடுவேன். அவர்கள் கை தட்டி ரசித்து 100 ரூபாய் தருவார்கள். அந்த நிலையும் என் வாழ்க்கையில் இருந்திருக்கிறது,” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இன்று கவர்ச்சியான நடிகையாக அறியப்படும் யாஷிகாவின் இந்த பகிர்வு, அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை நினைவூட்டுகிறது. போராட்டங்களும், இழப்புகளும் இருந்தபோதிலும் மீண்டு நின்றிருக்கும் அவரது மனவலிமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I danced in front of everyone for 100 rupees Yashika Anand speaks out in frustration


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->