மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையினர்...! - காரைக்காலில் 25 மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல்!
Sri Lankan Navy repeatedly commits atrocities 25 fishermen arrested Karaikal boats seized
எல்லை மீறி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு எழுப்பி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் திடீரென சிறைப்பிடித்த சம்பவம் மீனவர் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைநாகர் கடல் எல்லைப்பகுதியில் இரு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரிகள் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
இதையடுத்து, இரண்டு படகுகளுடன் இருந்த 25 பேரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பு கண்காணிப்புடன் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்க விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை இந்திய–இலங்கை கடல் எல்லைப் பிரச்சினையை நினைவூட்டியுள்ளதுடன், காரைக்கால் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளையும் எழுப்பியுள்ளது.
English Summary
Sri Lankan Navy repeatedly commits atrocities 25 fishermen arrested Karaikal boats seized