3 நாளில் 10 ஆயிரம் ‘ஸ்டாக்’ காலி...! - மிலான் ஒலிம்பிக் கிராமத்தில் ஆணுறை தட்டுப்பாடு...!
10000 stock empty 3 days Condom shortage Milan Olympic Village
2026–ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலியின் மிலான் மற்றும் கோர்டினா டி ஆம்பெஸ்சோ நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. போட்டிகளில் பங்கேற்கும் உலகத் தர வீரர்கள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்தில், உயர்தர தங்கும் அறைகள் மட்டுமல்லாமல், பல்வேறு அத்தியாவசிய வசதிகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அவற்றில் பாதுகாப்பு கருதி ஆணுறைகளும் இடம்பெறுகின்றன.பொதுவாக ஒலிம்பிக் கிராமங்களில் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தே புகார்கள் எழுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஏற்பட்டுள்ள பற்றாக்குறை சற்றே வித்தியாசமானது. போட்டிகள் தொடங்கிய வெறும் மூன்று நாட்களிலேயே வழங்கப்பட்ட அனைத்து ஆணுறைகளும் தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் பல நாடுகளிலிருந்து சுமார் 3 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்ட நிலையில், ஆரம்ப கட்டமாக 10 ஆயிரம் ஆணுறைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அந்த அளவு தேவையை சமாளிக்க போதாமல், முழுவதும் விரைவில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
1988–ஆம் ஆண்டில் உலகளவில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து, வீரர்களின் உடல்நல பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் இலவச ஆணுறைகள் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் சுமார் 3 லட்சம் ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டன.
அதேவேளை, இந்த ஆண்டு மிகக் குறைந்த அளவு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதே தட்டுப்பாட்டிற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் விளக்கமளிக்கையில், “ஒலிம்பிக் சாசனத்தின் விதி 62–ன் படி, வீரர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
எதிர்பார்த்ததை விட தேவை அதிகரித்துள்ளதால், கூடுதல் இருப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் நிறைவடையும் வரை எந்த தட்டுப்பாடும் ஏற்படாது” என உறுதியளித்தார்.
English Summary
10000 stock empty 3 days Condom shortage Milan Olympic Village