மீண்டும் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில்...! இன்றைய தங்க விலை நிலவரம் என்ன...?
Gold prices rocketing again What current gold price situation
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தங்க விலை ஒரு சவரனுக்கு ரூ.97,600 என்ற சரித்திர உச்சியை தொட்ட நிலையில், அதே மாதம் 28-ந்தேதி ரூ.88,600 என்ற அளவுக்கு சரிந்தது.
அதன் பின்னர் முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்து தங்கமும் பங்குச்சந்தையும் மாறி மாறி கவனத்தை ஈர்த்ததால், விலை கிரானமாக ஏற்ற–இறக்கத்துடன் தொடர்ந்தது.

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20, சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,000க்கும், ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்றது.ஆனால் இன்று தங்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.96,320 ஆகவும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.12,040 ஆகவும் விற்பனையில் உள்ளது.வெள்ளியும் இன்று விலையேற்றம் கண்டுள்ளது.
கிராமுக்கு ரூ.3, கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.199க்கும், ஒரு கிலோ ரூ.1,99,000க்கும் விற்பனையாகிறது.
இதன் தொடர்ச்சியான சரிவு முடிவுக்கு வந்த நிலையில், தங்கம் மீண்டும் ஏற்ற பாதையில் பயணிப்பது முதலீட்டாளர்களிடையே புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Gold prices rocketing again What current gold price situation