மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக்கொலை; மூன்று தினங்களுக்குள் மற்றுமொரு அரசியல் கொலை..! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ள சம்பம் பெர்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பாக இதே கட்சியைச் சேர்ந்த ரஜக் கான் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு சம்பவம்  நடந்துள்ளது.

பிர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பியூஷ் கோஷ் என்பவர் ஸ்ரீநிதிபூர் பகுதி தலைவராக இருந்துள்ளார். நேற்றிரவு இவருக்கு 02 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை, மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஏற்கனவே,  கடந்த 10-ஆம் தேதி இரவு திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ரஜாக் கான், கட்சியின் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து 02 நாட்களில் அக்கட்சியின் மற்றொரு தலைவர் சுட்டுக்கொல்லபட்டுள்ள சம்பவம் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பியூஷ் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக 02 பெண்கள் உள்பட 03 பேர் கைது செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து துப்ரஜ்பூர் பா.ஜ., எம்.எல்.ஏ., அனுப் ஷா கூறுகையில், 'கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாமர மக்கள் அல்லது திரிணமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கொல்லப்படுகின்றனர். இதற்கு மம்தா பானர்ஜியே முழு பொறுப்பாகும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசால் முடியவில்லை,' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதே போன்று கடந்த ஒரு வாரத்தில் பீஹார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ., தலைவர் சுரேந்திர கேவத் (52) மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  அதற்கு முன்னர் கடந்த ஜூலை 06-ஆம் தேதி,  பாட்னாவில் பிரபல தொழிலதிபரும், பா.ஜ., பிரமுகருமான கோபால் கெம்கா, வீட்டு வாசலில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trinamool Congress leader shot dead in West Bengal


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->