பச்சரிசியில் அல்வா.. எப்படி இருக்கும்...? செஞ்சு பாருங்க மக்களே...
How does Halwa taste in green rice Try it people
பச்சரிசி அல்வா....கேக்கவே புதியதாக இருக்குல்ல ...சாப்பிடவும் நல்ல டேஸ்ட் டா ...செம்மையா இருக்கும் ... ஒரு தடவ செஞ்சு பாருங்க ...
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பச்சரிசி மாவு 3 கப்
கடலை பருப்பு 1 கப்
வெல்லம் ஒன்றரை கப்
நெய் தேவைக்கேற்ப
முந்திரி 15
ஏலக்காய் பொடி 4 சிட்டிகை

செய்முறை :
முதலில், அரிசிமாவுடன் தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். நெய்யில் முந்திரி பருப்பை வறுக்கவும்.அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் கடலைபருப்புடன் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். பருப்பு குழையாமல் ஒரளவு திடமாக இருக்க வேண்டும். வெல்லத்துடன் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.பின்பு, பருப்பு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள அரிசிமாவை ஊற்றி கிளறிக்கொண்டே இருக்கவும். மாவு வெந்து வரும் வேலையில் கொதிக்க வைத்த வெல்ல தண்ணீரை சேர்த்து கிளறவும். பிறகு முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி விடவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது இறக்கிவிடவும். இப்போது பச்சரி அல்வா தயார்.டேஸ்ட் பண்ணி பாருங்க அசந்து போவீங்க .
English Summary
How does Halwa taste in green rice Try it people