குழந்தைகளுக்கு பிடித்த தேங்காய் கேக்... செஞ்சு கொடுத்து பாருங்க சூப்பரா சாப்பிடுவாங்க...
Childrens favorite coconut cake Give it to them and they will eat it up
தேங்காய் கேக்...குழந்தைகளுக்கு புடித்தமான கேக் RECIPE ..பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க ...அப்டி இருக்கும்...
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
முற்றிய பெரிய தேங்காய் 4
வெண்ணெய் 1ஃ4 கிலோ
ஏலக்காய் 10
சர்க்கரை 3\4 கிலோ
ரவை 100 கிராம்

செய்முறை :
முதலில், தேங்காய் கேக் செய்வதற்கு முதலில் தேங்காயை நன்றாகத் துருவி வைத்துக் கொள்ளவும்.பிறகு ரவையை லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய தேங்காயை நன்றாக வதக்கி, அதனுடன் ரவையைச் சேர்த்து கிளரி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன் ஏலக்காயைப் பொடியாக்கி அரைத்து வைத்துள்ள கலவையில் கலக்கவும்.பிறகு சர்க்கரையை 1 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக பாகு காய்ச்சி, பாகு பதமாக வந்தவுடன் கலவையைப் பாகில் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பிறகு அந்தக் கலவையை அகலமான தட்டில் பரப்பி, ஆறிய பிறகு விரும்பிய வடிவத்தில் கேக்கை கட் செய்து கொள்ளவும். டேஸ்டான தேங்காய் கேக் ரெடி.
English Summary
Childrens favorite coconut cake Give it to them and they will eat it up