மகளிர் இலவச பஸ் சேவை மற்றும் 175 தொகுதிகளில் உழவர் சந்தைகள் அமல்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!
Free bus service for women and farmers markets to be implemented in 175 constituencies Chandrababu Naidu announcement
ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளிலும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும், ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் மகளிருக்கான இலவச பஸ் சேவை திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் கர்னூலில் 'ஸ்வர்ணாந்திர, ஸ்வச்சாந்திரா' என்ற சுற்றுப்புற தூய்மைபடுத்தும் நிகழ்ச்சியை சந்திரபாபுநாயுடு தொடங்கி வைத்துள்ளார்.
அப்போது அவர் அங்கு பேசியதாவது:- சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள இந்த நிகழ்ச்சி மூலம் அனைவரும் விழிப்புணர்வு பெறவேண்டும் என்றும், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமையன்று பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஒருங்கிணைந்து தூய்மைப்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த 1999-ஆம் ஆண்டு ஆந்திராவில் உழவர் சந்தைகளை தன நிறுவியதாகவும், இதன்மூலம் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதாகவும், இதனால் நியாயமான விலையில் பொதுமக்களுக்கும் பொருட்கள் கிடைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாநிலத்தில் தற்போது 125 உழவர் சந்தைகள் உள்ளன. எனவே விரைவில் 175 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிதாக உழவர் சந்தைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறி விற்பனை நடக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

மேலும், உலக அளவில் யோகா தினத்தை பெருமைபடுத்த விசாகப்பட்டினத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், யோகா பயிற்சியை அனைவரும் ஒருநாளைக்கு அரை மணி நேரமாவது செய்யவேண்டும் என்றும், பொதுமக்களுக்கு ஆன்லைனிலும் யோகா பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அக்டோபர் 02-ஆம் தேதிக்குள் மாநிலத்தில் எங்கும் குப்பைகள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதாகவும், அத்துடன், தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Free bus service for women and farmers markets to be implemented in 175 constituencies Chandrababu Naidu announcement