360 டிகிரியில் இயற்கை அழகை ரசிக்கும் ‘விஸ்டாடோம்’ ரயில் சேவை: இந்திய ரயில்வே முதன் முயற்சி; பயணிகள் உற்சாகம்..!
Indian Railways first attempt at Vistadome train service that offers 360 degree views of nature
இயற்கை அழகை ரசிக்க வைக்கும் ‘விஸ்டாடோம்’ ரயில் சேவை இந்திய ரயில்வே உத்தரபிரதேசத்தில் முதன் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் துத்வா தேசியப் பூங்காவின் 109 கிலோமீட்டர் தூரத்தை கடந்து செல்லும் வகையில் ‘விஸ்டாடோம் கோச்’ ரயில் போக்குவரத்தை நேற்று ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
வனப்பகுதியின் இயற்கையை ரசிக்க கண்ணாடி கூரையுடன் கூடிய விஸ்டாடோம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு வனப்பகுதியின் இயற்கை அழகையும், வனவிலங்குகளையும் எவ்வித இடையூமின்றி கண்டு ரசிக்க முடியும்.
-a5z5a.png)
இந்த ரயிலில் பயன்படுத்தப்படும் விஸ்டாடோம் பெட்டிகளானது, கண்ணாடி கூரை, பெரிய ஜன்னல்கள் மற்றும் 360 டிகிரி காட்சியை வழங்கும் வசதிகளைக் கொண்டவை. இதனால், பயணிகள் வனத்தின் இயற்கை அழகு, வனவிலங்குகள் மற்றும் பசுமையான சூழலை முழுமையாக ரசிக்க முடியும்.
இந்த ரயில் போக்குவரத்து முயற்சியானது, உள்ளூர் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த விஸ்டாடோம் ரயிலில் வசதியான இருக்கைகள், பெரிய ஜன்னல்கள் மற்றும் குளிர்சாதன வசதிகள் உள்ளன. இந்த சேவையை இந்திய ரயில்வே மற்றும் உத்தரப் பிரதேச சுற்றுலாத் துறை இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Indian Railways first attempt at Vistadome train service that offers 360 degree views of nature