சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி: சீமான் அறிவிப்பு..!
Seeman announces to contest all 234 seats in the assembly elections alone
'' வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும், '' என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது குறித்து அவர் கோவையில் நடந்த மாநாட்டில் பேசும் போது கூறியதாவது:- அரசியல் வரலாற்றில் வாழ்க ஒழிக கோஷம் இல்லாத ஒரே கட்சி நாம் தமிழர் என்றும், கோவையில் வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என்றும், 05-வது முறையாக களத்தில் தனித்தே நிற்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 234 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும், என்றும், ஆண், பெண் வேட்பாளர்கள் தலா 117 இடங்களில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-zcxv5.png)
அத்துடன், ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி இறந்தபோது தமிழகத்தில் கருணாநிதி, அரசு விடுமுறை அறிவித்தார். இதனால் சோனியா மகிழ்ச்சி அடைவார் என்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழன் வாக்கை வாங்கி வயிறு வளர்த்து கட்சிகள் பிழைக்கின்றன என்றும், இந்த மண்ணிற்கு என துதொடங்கப்பட்ட கட்சிகள் உங்களுக்காக நின்றதா சுதந்திரமாக கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், என் எண்ணம் மட்டும் சின்னம் அல்ல. சின்னமே நான் தான் என்று பேசிய அவர், விவசாயத்தை காப்போம் என்ற வாதத்தை முன்வைத்து தேர்தலில் நிற்போம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்திய அரசியல், இந்தியாவை யார் ஆள்வார்கள் என்பதில் என்னை தேடிய மக்கள், தமிழகத்தை யார் ஆள்வார்கள் என்பதில் என்னை தவிர்த்துவிட்டு மக்கள் செல்ல மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-djlgs.png)
அத்துடன், கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை. 08 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இம்முறையும் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியம் என்றும், .இதில் ஆண்களுக்கு 117 இடங்களும், பெண்களுக்கு 117 இடங்களில் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், மற்றவர்களுக்கு அரசியல் கட்சி தேர்தல் அரசியல். நமக்கு போர். இனமானப் போர். நிலம் காக்கும் போர். நான் முன்வைக்கும் அரசியலை ஒருவராலும் மறைக்க முடியாது என்று சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
Seeman announces to contest all 234 seats in the assembly elections alone