விழாக்கோலம் பூண்ட வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக பதவியேற்றுக்கொண்ட போப் 14-ஆம் லியோ..!
Pope Leo XIV was inaugurated as Pope of the Catholic Church
புதிய போப் ஆக வாடிகன் நகரில் லட்சக்கணக்கானோர் முன்னிலையில், ராபர்ட் பிரெவோஸ்ட் (Pope Leo XIV) பதவி ஏற்றுக் கொண்டார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (88), அண்மையில் காலமானார். அதன் பின்னர் புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் என்ற பெருமையை ராபர்ட் பிரெவோஸ்ட் (Pope Leo XIV) பெற்றுள்ளார். பாப் ஆண்டவரின் அதிகாரத்தை குறிக்கும் வகையில் மீனவ மோதிரம் அவருக்கு அணிவிக்கப்பட்டது. இந்த பதவியேற்பு விழாவின் போது பாப் காசா, உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
-ftzaw.png)
இந்த பதவியேற்பு விழாவில், அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயணன் சிங் கலந்து கொண்டு, இந்திய மக்களின் சார்பில் வாழ்த்துகளைத் ராபர்ட் பிரெவோஸ்ட்ஸ் க்கு தெரிவித்துக் கொண்டார்.
English Summary
Pope Leo XIV was inaugurated as Pope of the Catholic Church