மக்கள் மருந்தகத்தின் பூட்டை உடைத்துக் கொள்ளை - சென்னையில் பரபரப்பு.!!
robbery in makkal marunthagam at chennai
சென்னையை அடுத்த திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் பூட்டப்படிருந்த மக்கள் மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.

இதனையடுத்து அருகில் இருந்த மளிகைக் கடையையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மர்ம நபர்களை பிடிப்பதற்காக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
robbery in makkal marunthagam at chennai