தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு...! - முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை - Seithipunal
Seithipunal


தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழக மற்றும் அதனைய ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

இதனால் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து இன்று காலை 11 மணியளவில்  தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனையானது நடக்க இருக்கிறது.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Southwest Monsoon Precautionary Arrangements Meeting chaired by Chief Minister today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->