சிவகிரி தம்பதியினர் கொலை வழக்கு - 4 பேர் கைது.!!
4 peoples arrested for sivagiri couples murder case
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசாமி - பாக்கியம் தம்பதியினர். இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் ராமசாமி, மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 1ம் தேதி மகன் கவிசங்கர் செல்போன் மூலம் அழைத்தும் தந்தை ராமசாமி எடுக்காததால் அருகிலுள்ள உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லியதையடுத்து அவர்கள் சென்று பார்த்தபோது வீட்டில் துர்நாற்றம் வீசியதால் உடனே போலீசாருக்கு தகவலளித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து பார்த்ததில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முதிய தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
4 peoples arrested for sivagiri couples murder case