வீடியோ: கனவில் வந்து காருமாரியம்மன் கேட்ட கேள்வி? மடிப்பிச்சை எடுத்த நடிகை நளினி!
actress nalini karumariyamman madipichai
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகை நளினி, சென்னை திருவேற்காடு ஸ்ரீ காருமாரியம்மன் கோவிலில் மடிப்பிச்சை எடுத்து காணிக்கை செலுத்தினார்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நளினி, “திருவேற்காடு காருமாரியம்மன் என் இஷ்ட தெய்வம் மட்டுமல்ல; என் வாழ்நாளெல்லாம் என் உடனிருக்கும் உயிர்தெய்வம்.
சமீபத்தில் அம்மன் என் கனவில் வந்து, ‘எனக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று கேட்டார். அதனால் மனமார்ந்த நன்றி தெரிவிக்க என்னால் முடிந்த காணிக்கையை அம்மனுக்கு செலுத்த, மடிப்பிச்சை எடுத்து வந்தேன்” என தெரிவித்தார்.
அம்மனின் அருளால்தான் வாழ்க்கையில் முன்னேறி வருகிறேன் என நளினி உணர்ச்சிபூர்வமாக தெரிவித்தார்.
English Summary
actress nalini karumariyamman madipichai