மிரண்டு ஓடப்போவது திமுகதான்... பைபை ஸ்டாலின் - எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS DMK MK Stalin
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தில் இன்று மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: “அதிமுக உங்களுடைய கட்சி. நன்மை செய்யும் கட்சி. ஆனால் திமுக – கொள்ளை, மோசடி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு. இன்று போதைப்பொருள், கஞ்சா இல்லாத ஊரே இல்லை.
திருவள்ளூர் மாவட்டம், கும்முடிப்பூண்டியில் பள்ளிச் சிறுமி ஒருவரை போதை ஆசாமி கடத்திச் சென்றார். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பற்ற நிலை. இது என்ன ஆட்சி?
நான் உண்மைதான் பேசுகிறேன். அதற்காக எனக்குத் தண்டனை தர முடியாது. நல்லாட்சியை மீண்டும் கொடுப்பது நாங்கள்தான்.
நன்னிலம் தொகுதியில் அதிமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், பாலங்கள், நெல் சேமிப்பு கிடங்குகள், கொள்முதல் நிலையங்கள் என பல திட்டங்களை கொண்டுவந்தோம்.
உணவு பதப்படுத்தும் பூங்கா, அரசி ஆலை, புதிய ஊராட்சி ஒன்றியம், புறவழிச்சாலை உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேறும். மீண்டும் ஆட்சி அமைப்பது அதிமுகதான். மிரண்டு ஓடப்போவது திமுகதான். பைபை ஸ்டாலின்” என கூறினார்.