பொய்களை உடைத்து நொறுக்கியவர் பெரியார் - எம்.பி கனிமொழி.!!
mp kanimozhi post about periyar birthday
இன்று தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளை 'சமூக நீதி நாள்' ஆக தமிழ்நாடு அரசு கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தது. இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-
காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!
நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர்.
மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
mp kanimozhi post about periyar birthday