மயிலாடுதுறையில் பரபரப்பு - நள்ளிரவில் வாலிபர் வெட்டிக் கொலை.!!
youth murder in mayiladuthurai at midnight
மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் வைரமுத்து. இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த சிலர் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் வைரமுத்துவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வைரமுத்துவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட வைரமுத்து அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் சகோதரர்களும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து வைரமுத்துவை நேற்று முன்தினம் இரவு அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார், வைரமுத்து காதலித்த பெண்ணின் சகோதரர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 5 பேரை அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட வைரமுத்துவின் காதலியும் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
youth murder in mayiladuthurai at midnight