மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை - உத்தரகாண்டில் 15 பேர் பலி.!
15 peoples rain in uttarkhand for rain
நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதனால், வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் திடீரென பெய்யும் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதன் படி இன்று அதிகாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் டேராடூனில் மேகங்கள் திரண்டு மழை பெய்தபோது திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த மேகவெடிப்பில் சிக்கி குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர். நிறைய பேர் மயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் இதுவரைக்கும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 128 பேர் காயமடைந்துள்ளனர். 94 பேர் காணாமல் போயுள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
English Summary
15 peoples rain in uttarkhand for rain