ஊறவைத்த கிராம்பு தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?
benefits of cloves water
முதல் நாள் இரவு கொஞ்சம் கிராம்பை தண்ணீரில் போட்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
* செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கிராம்பு தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை தரும். கிராம்பில் உள்ள பண்புகள் வயிற்று வாயு, அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகளைப் போக்க உதவியாக இருக்கும்.
* கிராம்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது உடலில் வீக்கம் மற்றும் வலியை குறைக்கும்.
* கிராம்பில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை பல வகையான தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
* உடல் எடையைக் குறைக்க விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு நீரை உட்கொள்ளலாம்.