இபிஎஸ் எப்படி மண்டியிட்டு தவிந்து முதல்வரானார் தெரியுமா..? கூவாத்தூரில் நடந்த சம்பவத்தை போட்டுடைத்த டிடிவி.தினகரன்..!
Do you know how EPS became the Chief Minister after kneeling down TTV Dinakaran covered the incident in Koovathur
அதிமுகவில் ஒன்றிணைவு தேவை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்ததைத் தொடர்ந்து கட்சியின் உள்ளக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி நேற்று அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசியபோது, “டி.டி.வி தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ் ஆகியோரை அதிமுகவில் சேர்க்க எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் கட்சியை அழிக்க முயன்றவர்கள். நடுரோட்டில்தான் நிற்பார்கள்” என கடுமையாக தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்று தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமியை நேரடியாக தாக்கினார்.
அவர் கூறியதாவது:“எடப்பாடி பழனிசாமி முன்னுக்கு பின் முரணாகப் பேசுவது அவர் தோல்வி பயத்தில் இருப்பதைக் காட்டுகிறது. இந்த தேர்தலில் அவர் கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவார். அவருடன் கூட்டணியில் இருப்பவர்களே சிந்திக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக எடப்பாடி பழனிசாமியை புறக்கணிப்பார்கள். நேற்று தான் ‘நான் யாருக்கும் பயப்பட மாட்டேன், தன்மானம் தான் முக்கியம்’ என்று சொல்கிறார். அப்படியிருக்க, டெல்லிக்கு போய் ஆதரவு கேட்பது ஏன்? அது அவர் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது” என்றார்.
மேலும் அவர் சாடியதாவது:“மார்ச் மாதம் டெல்லிக்கு போனபோது தலைமைக் கழக கட்டிடம் பார்ப்பதற்காக செல்கிறேன் என்று சொன்னார். ஆனால், ஆறு கார்கள் மாறி அமித்ஷாவை பார்த்துவிட்டு வந்தது யாருக்கும் புதுசல்ல. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது, எடப்பாடியை காப்பாற்றியது பாஜகவல்ல; சட்டமன்ற உறுப்பினர்கள்தான். அப்போது 18 எம்.எல்.ஏக்கள், எடப்பாடி நல்ல ஆட்சி நடத்தவில்லை எனக் கூறி அவரை மாற்ற மனு கொடுத்தார்கள். அது துரோகம் அல்ல; அவர் ஜெயலலிதாவின் ஆட்சிமுறையிலிருந்து விலகியதால் தான் நடந்தது” என தினகரன் குற்றம் சாட்டினார்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைப் பற்றியும் தினகரன் விமர்சித்து,“அப்பொழுது எடப்பாடி முதலமைச்சர் என்றால் நாங்கள் இருக்க மாட்டோம் என ஓடியவர் இன்றைய எடப்பாடிதான். அந்த நேரத்தில் அனைவரும் எடப்பாடிக்கு வாக்களிக்க காரணம் யார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். நன்றிக்கும் பழனிசாமிக்கு சம்பந்தமே இல்லை. துரோகமே அவரின் அடையாளம்” என தாக்கம் அதிகரித்தார்.
இதனால், ஏற்கனவே செங்கோட்டையன் கெடு விதிப்பால் கிளர்ச்சியான அதிமுக, தற்போது டிடிவி தினகரனின் நேரடி தாக்குதலால் மேலும் பரபரப்பாகியுள்ளது.
அரசியல் வட்டாரங்கள் கூறுவதாவது, அடுத்த தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் மீண்டும் கடுமையான உள்கட்சிக் குழப்பம் வெடிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
English Summary
Do you know how EPS became the Chief Minister after kneeling down TTV Dinakaran covered the incident in Koovathur