ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி விஷம் வைத்தே கொல்லப்பட்டுள்ளார்; உறுதிப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடுகள்; புடினுக்கு சிக்கல்..? - Seithipunal
Seithipunal


ரஷிய எதிர்க்கட்சி தலைவராக இருந்த அலெக்சி நவால்னி அந்நாட்டு அதிபதி விளாதிமிர் புடினை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால், அவர் மீது இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது. இதனையடுத்து, கடந்த 2013-இல் அலெக்சி நவால்னி மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வழக்கில், அவருக்கு 03 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதாவது, பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், நீதிமன்ற அவமதிப்பு உள்பட பல்வேறு வழக்குகளில் அலெக்சி நவால்னிக்கு மொத்தம் 19 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பினையடுத்து, கடந்த 2021 முதல் அலெக்சி நவால்னி, சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். இதற்கிடையே, அலெக்சி நவால்னி திடீரென சிறையிலேயே உயிரிழந்ததாக ரஷிய ஊடகங்களில் செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உக்ரைன் போர் உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்களிடம் அந்நாட்டு அதிபர் புடின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். இதன்காரணமாக அவரை எதிர்த்து விமர்சித்த அலெக்சி நவால்னியின் மரணம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. அவரின், உயிரிழப்புக்கு விளாடிமிர் புதின் தான் காரணம் என நவால்னியின் மனைவி யூலியா நவல்னயா பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அலெக்சி நவால்னி விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 05 ஐரோப்பிய நாடுகள் உறுதிசெய்துள்ளன.

இந்த நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை ஆமைச்சர்கள் இதனை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர். சர்வதேச சட்ட விதிகளைப் புறக்கணித்து இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாக குறித்த நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.  மேலும்,  ரசாயன ஆயுத பயன்பாடு தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா மீது இந்த நாடுகள் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

European countries confirm that Russian opposition leader Alexei Navalny was poisoned


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->