நியூசிலாந்து பௌலர்களை துவம்சம் செய்த மார்க்கிராம்: பேட்டர்களை புரட்டி எடுத்த யான்சன்; அபார வெற்றி ஈட்டிய தென்ஆப்பிரிக்கா ..!
South Africa wins by 7 wickets against New Zealand
டி20 உலகக் கோப்பை போட்டியில், 24 வது போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் குரூப் D இல் உள்ள நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் மார்கிரம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 07 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. அணியின் சார்பில், பின் ஆலன் 17 பந்தில் 31 ரன்கள் விளாசினார். மார்க் சாப்மேன் 26 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்கா சார்பில், யான்சன் 04 ஓவரில் 40 ரன்கள் கொடுத்து 04 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்காவின் தொடக்கவீரர்கள் மார்க்கிராம்- குயின்டன் டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

மார்க்கிராம் தொடக்கம் முதல் அதிரடி ஆடினார். டி காக் 14 பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பவர் பிளேயில் முதல், 03 ஒவரில் தென்ஆப்பிரிக்கா 50 ரன் எடுத்தது. அணியின் கேப்டன் மார்க்கிராம் பொறுப்புடன் ஆடி, 19 பந்தில் அரைசதம் அடித்தார். ரிக்கெல்டன், டெவால்டு பிரேவிஸ் தலா 21 ரன்கள் சேர்த்தனர்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய மார்க்கிராம், 44 பந்தில் 86 ரன்களும், டேவிட் மில்லர் 17 பந்தில் 24 ரன்களும் அடித்தனர். அதன்படி, தென்ஆப்பிரிக்கா அணி, 17.1 ஓவரில் 03 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இறுதியில் 17 பந்துக்கள் மீதமிருக்க 07 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து குரூப் D-இல் மூன்று வெற்றிகளை பெற்றுள்ள ஹென்னாப்பிரிக்கா அணி, முதலிடத்திலும் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளன.
English Summary
South Africa wins by 7 wickets against New Zealand