இந்தியாவில் அதிக கடன் சுமை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம்..? முழு விபரங்கள் உள்ளே..!
Tamil Nadu tops the list of states with the highest debt burden in India
இந்தியாவில் மொத்த 28 மாநிலங்கள், 08 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. கடைசியாக உருவான மாநிலம் தெலுங்கானா (ஜூன் 2, 2014) அதாவது, ஒவ்வொரு மாநிலமும் ஆளுநரைத் தலைவராகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையும் கொண்டு இயங்குகிறது. யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் நிர்வாகிகளின் மூலம் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், மாநிலங்கள் அதிக கடன் வாங்கியுள்ள இந்திய மாநிலங்கள் முதல் 05 இடங்களில் உள்ள மாநிலங்களில் பட்டியலை பார்க்கலாம்.
இந்த பட்டியலில் படி, அதிக கடனில் தத்தளிக்கும் பட்டியலில் மேற்கு வங்கம் 05 ஆம் இடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தின் மொத்த கடன் சுமார் 7.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
அடுத்ததாக, 04-ஆம் இடத்தில் கர்நாடகா உள்ளது. மொத்த கடன் சுமார் 7.30 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
அடுத்து, 03-ஆம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த கடன் சுமார் 8.10 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இதனையடுத்து, அதிக கடன் உள்ள இந்திய மாநிலங்களின் பட்டியலில் 02-ஆம் இடத்தில் உத்திரப்பிரதேசம் உள்ளது. அங்கு மொத்த கடன் சுமார் 8.60 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இறுதியாக, இந்தியாவிலேயே அதிக கடம் சுமை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில் நம்ம தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த கடன் சுமார் 9.60 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamil Nadu tops the list of states with the highest debt burden in India