அரியானாவில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை 'வெளியே போ' என்று மிரட்டிய பாஜக அமைச்சரால் பரபரப்பு; நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


நேற்று அரியானா மாநில கேய்தல் பகுதியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாஜகவை சேர்ந்த அமைச்சர் அனில் விஜ் பங்கேற்றார். அப்போது மோசடி புகார் குறித்து ஐஎஸ்ஐ அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டார். 

ஆனால்,  அந்த அதிகாரி குருக்ஷேத்ரா மாவட்டத்தில் பணியாற்றுவதால் அவரை சஸ்பெண்ட் செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும், டிஜிபிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் பெண் போலீஸ் எஸ்பி உபாசனா சட்ட ரீதியான விளக்கமளித்துள்ளார்.

இதை கேட்ட அமைச்சர்  கோபமடைந்து, 'உனக்கு அதிகாரம் இல்லை என்றால் இங்கிருந்து வெளியே போ’ என்று ஒருமையில் பேசியதுடன், தனது உத்தரவு அரியானா மாநிலம் முழுவதும் செல்லும் என்று ஆவேசமாக கத்தியுள்ளார்.

பின்னர் தனது உத்தரவை டிஜிபிக்கு முறைப்படி தெரிவிக்குமாறு அங்குள்ள போலீசாருக்கு அவர் ஆணையிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான புகாரின் போது பெண் எஸ்பி சங்கீதா காலியாவுடன் அமைச்சர் அனில் விஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவரை ‘வெளியே போ’ என்று ஆவேசமாக கூறியதால் குறித்த பெண் அதிகாரி அங்கிருந்து உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP minister in Haryana angrily threatens female IPS officer to go out


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->