'ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறோம்'; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்..!
We have accomplished achievements that would take thousands of years to achieve in just five years says MK Stalin
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்று வடக்கு மண்டல வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு திருப்பத்தூரில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறயதாவது; இந்தியா முழுவதும் எந்த டிரெண்ட் இருந்தாலும், தமிழ்நாட்டின் நிரந்தர டிரெண்ட், Black and Red-தான் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், சட்டமன்றத் தேர்தலிலும் நாம்தான். ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சிதான் அமைக்கும் என்றும், திராவிட மாடல் 2.0 ஸ்டார்ட் என்று பேசியுள்ளார்.
அத்துடன், ஆயிரமாண்டுகள் நின்று பேசும் சாதனைகளை, ஐந்தே ஆண்டுகளில் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம் என்றும், நம்முடைய திராவிட மாடல் அரசு, சாதனைகளின் அரசாக இருப்பதுதான், பழனிசாமி அவர்கள் இவ்வளவு வேதனையுடன் புலம்புவதற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டிற்கு பரப்புரைக்கு வரும் பிரதமர், தமிழ்நாட்டிற்கு என்று இந்தச் சாதனைகளை எல்லாம் செய்திருக்கிறோம் என்று சொல்கிறாரா..? இருந்தால்தானே சொல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நம்முடைய இலக்கு எவ்வளவு? 200 தொகுதிகள்..! 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் என்ன தேவை? ஓய்வில்லாத உழை என்று மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
English Summary
We have accomplished achievements that would take thousands of years to achieve in just five years says MK Stalin