வாலிபக் கவிஞர்': திரு.வாலி அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


தன் வரிகளால் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்  'வாலிபக் கவிஞர்': திரு.வாலி அவர்கள் நினைவு தினம்!.

 தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர், பாடலாசிரியர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி 1931ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன் ஆகும்.

 1958ஆம் ஆண்டு 'அழகர் மலைக் கள்வன்' என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதினார். 1963ஆம் ஆண்டு 'கற்பகம்' என்ற திரைப்படத்தில் இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

 ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

 இதுமட்டுமல்லாமல் பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் என நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2007ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு பாரத விலாஸ் திரைப்படத்தில் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாடலுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

 திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய இவர் தனது 81வது வயதில் 2013 ஜூலை 18 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Poe Mr Valis remembrance day


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->