பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்ட திரு.ஜார்ஜஸ் லிமேட்டர் அவர்கள் பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்ட திரு.ஜார்ஜஸ் லிமேட்டர் அவர்கள் பிறந்ததினம்!.

 பிரபஞ்ச விரிவாக்க கோட்பாட்டை முதன்முதலில் வெளியிட்ட ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் லிமேட்டர் (Georges Henri Joseph Edouard Lemaitre) 1894ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி பெல்ஜியம் நாட்டின் சாலர்வ் நகரில் பிறந்தார்.

 இவர் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற ஹபிள் விதியை (Hubbles law) எட்வின் ஹப்பிள் கூறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே 1927-ல் இவர் வெளியிட்டார்.

 காஸ்மிக் எக் என இவர் கண்டறிந்த கோட்பாடுதான் பின்னாளில், பெரு வெடிப்புக் கோட்பாடு என்ற பெயரில் பிரபலம் அடைந்தது. பிரபஞ்ச விரிவாக்கம் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து, விரிவான கட்டுரைகளை 1933-ல் வெளியிட்டார்.

பிரபஞ்சவியல் கணக்கீடுகளுக்கு கணினியைப் பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்த ஜார்ஜஸ் லிமேட்டர் 72வது வயதில் 1966 ஜூன் 20 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இயக்குனர் இமயம்' திரு.பாரதிராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.

இன்று பிறந்தநாள் காணும் இயக்கத்தின் பாதையில் என்றும் இமயமாய் இருந்து கொண்டிருக்கும் 'இயக்குனர் இமயம்' திரு.பாரதிராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!.

 கிராமத்து எழிலோடு மண்வாசனை மாறாமல் தன்னுடைய கற்பனையை விருந்தளித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா 1941ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி தேனி அல்லி நகரில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி.

 சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர், சினிமா மேலிருந்த ஈடுபட்டால் சென்னைக்குப் புறப்பட்டு வந்து, அங்கே இளையராஜா, கங்கை அமரன், ஆர்.செல்வராஜ் ஆகியோருடன் தங்கியிருந்தார்.

 இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூலம் திரையுலக அறிமுகம் கிடைத்து, இயக்குநர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் சேர்ந்து சினிமா நுணுக்கங்களை கற்றார்.

  1978ல் இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 16 வயதினிலே, மாபெரும் வெற்றியை தந்தது. அதை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, மண் வாசனை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், கருத்தம்மா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார்.

 இவர் பத்மஶ்ரீ, 6 முறை தேசிய விருதுகள், 3 முறை மாநில அரசு விருதுகள், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தி விருது, ஃபிலிம் ஃபேர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

 தமிழ் திரைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

It is the birthday of Mr Georges Lematre who first proposed the theory of the expansion of the universe


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->