என் மூச்சிருக்கும் வரை தமிழக மக்களுக்காகவே பாடுபடுவேன் - வைகோ!
MDMK Vaiko DMK BJP Kamarajar
தருமபுரியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, "என் மூச்சிருக்கும் வரை மதிமுகவை ஒரு கருவியாக கொண்டு, தமிழக மக்களுக்காகவே பாடுபடுவேன்," என உறுதி தெரிவித்தார்.
மேலும், "சென்னை மாநிலக் கல்லூரி நாட்களில் காமராஜர் என்னை காங்கிரஸில் சேர அழைத்தார். ஆனால் நான் மறுத்தேன். என் அரசியல் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் நிரம்பியது. துரோகங்களைத் தாங்கிக் கொண்டே இருக்கிறேன். 1994ல் மதிமுகவை தொடங்கினேன். அதே ஆண்டில் கிருஷ்ணகிரியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கினேன்," என்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, பட்டியல் சமூகத்தினருக்கு எதிரானவன் என கூறப்படுகிறேன். ஆனால் என் நண்பர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே; அவர்கள் என் சமையலறைக்குள் வருபவர்கள்தான். ஆனால் ஊடகங்கள் மனசாட்சி இல்லாமல் பேசுகின்றன.
ஸ்டெர்லைட், நெய்வேலி நிலக்கரி, காவிரி, நியூட்ரினோ மையம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் நீதிக்காக தன்னாலான போராட்டங்களை முன்னெடுத்ததேன். என் மூச்சு உள்ளவரை தமிழக மக்களுக்காக போராடுவேன் என்றார்.
மேலும், மோடியை ஆதரித்த பின்பு ராஜபக்சேவின் பதவியேற்பு விழாவுக்கு எதிராக டெல்லியில் கருப்புக் கொடி காட்டி கைது செய்யப்பட்டதும், பின்னர் பாஜகவிலிருந்து விலகியதும் நினைவுபடுத்தினார்.
திமுகவுடன் உள்ள கூட்டணியின் நோக்கம் – இந்துத்துவா சக்திகளைத் தமிழகத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கவே என்பதையும் வைகோ வலியுறுத்தினார்.
"முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி வருகிறார். வரவிருக்கும் தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்," என்றும் கூறினார்.
English Summary
MDMK Vaiko DMK BJP Kamarajar