அஜித்குமார் சகோதரர் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ சம்மன்!
ajithkumar case CBI Naveen TN Police
திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார் காவல் மரண வழக்கில், சிபிஐ விசாரணை தீவிரம் பெறும் நிலையில், அஜித்குமார் சகோதரர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது சம்மன் விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயிலுக்கு வந்த நிகிதா என்ற பெண், தன்னுடைய காரில் வைத்திருந்த நகைகள் இழந்ததாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, அதே கோயிலில் பாதுகாவலராக இருந்த அஜித் குமார், போலீசாரால் அழைத்து விசாரணை செய்யபட்டார். விசாரணையின் போது தாக்கப்பட்டதாக கூறப்படும் அஜித் குமார், ஜூன் 28ஆம் தேதி மரணம் அடைந்தார்.
இந்த வழக்கில் விசாரணை செய்து, தாக்குதலுடன் தொடர்புடையதென கருதப்பட்ட போலீசார் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன் மற்றும் ராஜா ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் மோஹித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மடப்புரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஓட்டுநர் கார்த்திக் வேல், பிரவீன் குமார், அருண்குமார் (ஆட்டோ ஓட்டுநர்), வினோத் குமார் (செக்யூரிட்டி), நவீன் குமார் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி, அவர்கள் நாளை மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
English Summary
ajithkumar case CBI Naveen TN Police