சாட்ஜிபிடி பயனர்களுக்கு எச்சரிக்கை: அதில் எதையெல்லாம் பகிர கூடாது..? மீறினால் என்ன நடக்கும் ..?
What should not be shared on ChatGPD
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, எக்ஸின் குரோக், கூகுளின் ஜெமினி உள்ளிட்ட பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் தற்போது பாவனையில் உள்ளது. இதில் சாட்ஜிபிடி பயனர்கள் மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.
அதாவது, எந்த ஒரு சின்ன சந்தேகம் என்றாலும் அதன் மூலம் தெரிந்து கொள்வதை இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். குறிப்பாக, நமக்கு ஏற்படும் சாதாரண தலைவலிக்கு, சின்ன, சின்ன கணக்குகளின் கூட்டல், பெருக்கல் கூட கேட்டுக்கும் ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, காலை முதல் இரவு தூங்கும் வரையில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு சாட்ஜிபிடியே பலருக்கும் கை கொடுக்கின்ற நிலையில் அதை சுற்றியே பல பயனர்கள் வாழ்ந்து வருகின்றனர். எதை அதில் தேட வேண்டும் கேட்க வேண்டும் என்ற வரையறை கூட இல்லாமல், அலுவலகத்தில் சந்தேகம் என்றால்கூட அதை பயன்படுத்துகின்றனர்.
பொதுவாவே இந்த நவீன உலகில் ஏஐ தளங்கள் எந்த அளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு கட்டுப்பாடு இன்றி அனைத்து விவரங்களையும் கேட்டு பெறுவது தேவையற்ற குழப்பங்களுக்கும் சிக்கலுக்குமே வழிவக்கும் என அத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சாட்ஜிபிடியில் ஒருவரின் கிரெடிட் கார்டு, வங்கி விவரங்கள், வீட்டு முகவரி, போன் நம்பர்கள், பாஸ்வேர்டுகள், மருத்துவ விவரங்கள், மருந்து சீட்டுக்கள், சட்ட பிரச்சினைகள், வழக்கு விவரங்கள், தனிப்பட்ட குடும்ப / உறவு பிரச்சினைகள், பணி மற்றும் வர்த்தக ரகசியங்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் ரகசிய தகவல்கள், சட்ட விரோத செயல்களுக்கான வழிமுறைகள், பிறரது தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவைகளை பகிர கூடாது என சாட்ஜிபிடியே கூறியுள்ளது.
அத்துடன், பொதுவெளியில் பகிர தயங்கும் எந்த ஒரு விஷயத்தையும் பகிர வேண்டாம் என்று கூறியிருக்கிறது. ஏனெனில் இதுபோன்ற தனிப்பட்ட தரவுகள் பிறருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதால் அதனால் பல சிக்கல்கள் எழக்கூடும் என்பதால் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
What should not be shared on ChatGPD