'நான் ஓய்வு பெற்ற பின்புதான் வழக்கை விசாரிக்க மத்திய அரசு விரும்புகிறதா..?' தலைமை நீதிபதி அதிருப்தி..!
Chief Justice unhappy that the central government wants to hear the case only after I retire
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே குறித்த வழக்கு விசாரணைக்காக இரண்டு முறை பட்டியலிடப்பட்டது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணையை வேறு தினத்திற்கு ஒத்தி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர். அதை, தலைமை நீதிபதியும் ஏற்றுக்கொண்டு ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தி,''இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராக வேண்டிய தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி வேறு ஒரு முக்கிய வேலையில் இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க வேண்டும்'' என, மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.

இதனால் தலைமை நீதிபதி கவாய் அதிருப்தி அடைந்துள்ளார். இதனையடுத்து, ''நான், நவம்பர் 24-ஆம் தேதி ஓய்வு பெறுகிறேன். அதற்கு பின்தான் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளதோடு, அப்படி எதுவும் இருந்தாலும் அதை வெளிப்படையாக கூறி விடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் எப்போது இதை விசாரித்து முடிப்பது, எப்போது தீர்ப்பு எழுதி முடிப்பது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் குறிப்பிட்டுள்ளளார்.
English Summary
Chief Justice unhappy that the central government wants to hear the case only after I retire