காமராஜர் வேடமணிந்து காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடிய பள்ளி மாணவர்கள்!
School students celebrating Kamarajars birthday dressed as Kamarajar
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக நடந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழாவில் காமராஜர் வேடமணிந்து காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடிய பள்ளி மாணவர்கள்,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது .விழாவில் காமராஜர் வேடமடைந்து சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகள் காமராஜர் குறித்து மழலை குரலில் பேசி அவரது பிறந்தநாளில் சாதனைகள் குறித்து நினைவு கூறியது பார்வையாளர்களை நெகிழ வைத்தது.
காமராஜரின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே உள்ள கொண்டமநாயக்கன்பட்டி லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் மாணவிகள் பள்ளியில் இருந்து ஊர்வலமாக காமராஜர் சிலைவரை வந்தனர். ஊர்வலத்தினை பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் முன்னிலையில் , செயலாளர் மாத்யூ ஜோயல் ,நிர்வாகி தமயந்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்தில் வந்த மாணவ மாணவிகள் காமராஜரின் சாதனைகள் குறித்தும் அவரது தியாகம் குறித்தும் பேனர்களை கைகளில் ஏந்தி கோஷமிட்டு வந்தனர்.
ஊர்வலம் முடிந்து பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காமராஜர் வேடமணிந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் தங்களது மழலை குரலில் காமராஜரின் சாதனைகள் மற்றும் தியாகங்கள், அவர் முதல்வராக இருந்த ஆற்றிய பணிகள் குறித்து விளக்கி பேசியது சாலையில் சென்ற பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
அதனைத் தொடர்ந்து ஊர்வலமாகச் சென்று காமராஜரின் உருவ சிலைக்கு மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டிச் செல்வி திவ்யா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
English Summary
School students celebrating Kamarajars birthday dressed as Kamarajar