நாமக்கல்: ரூ.10 லட்சத்திற்கு கிட்னி விற்பனை! புரோக்கராக திமுக நிர்வாகி! பரபரப்பு தகவல்!
namakkal human organ sale issue dmk admk
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சிறுநீரகங்கள் ஆந்திரம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பொருத்தப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது வெளிவர காரணம், நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தான் இந்த மோசடி தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை, காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், கிட்னி புரோக்கர் ஒருவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,தலைமறைவாக உள்ள அந்த கிட்னி புரோக்கர் திமுகவின் பேச்சாளர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
English Summary
namakkal human organ sale issue dmk admk