இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக் குறைவால் காலமானார்!
director velu prabakaran death
இயக்குநர் வேலு பிரபாகரன், உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார்.
கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலு பிரபாகரன் தனது திரைப்பயணத்தை ஒளிப்பதிவாளராகத் தொடங்கினார். 1989-ஆம் ஆண்டு நாளைய மனிதன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து அதிசய மனிதன், அசுரன, ராஜாளி, கடவுள், சிவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். இவரது திரைப்படங்கள் பல்வேறு சமுதாய, மத, அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி விவாதங்களை ஏற்படுத்தியன.
இயக்குநராக மட்டுமல்லாது நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி, பீட்ஸா 3 போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த மே மாதத்தில் வெளியான கஜானா திரைப்படத்தில் கடைசியாக தோன்றினார்.
English Summary
director velu prabakaran death