எல்லைகளை கடந்து காதல்.. பாகிஸ்தான் வாலிபரை கரம்பிடித்த அமெரிக்க பெண்!
Love transcends boundaries An American woman has captured the heart of a Pakistani youth
அமெரிக்க பெண் ஒருவர் எல்லைகளை தாண்டி பாகிஸ்தான் வாலிபரை கரம்பிடித்தார். இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் ஸ்பிரிங்பீல்ட் பகுதியை சேர்ந்த 47 வயதான மிண்டி ராஸ்முஸன் என்ற பெண்ணும், பாகிஸ்தானை சேர்ந்த 31 வயதான சஜித் செப் கான் என்பவரும் சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகினர்.
அதனை தொடர்ந்து பேஸ்புக்கில் பேசி நட்பாக பழகி வந்த அவர்கள் பின்னர் வீடியோ கால் மூலம் பேச தொடங்கி காதலை வளர்த்துள்ளனர்.இந்த பழக்கம் வெகுநாளாக காதல் மயக்கத்தில் செல்ல நாடு, மதம் உள்ளிட்ட எல்லைகளை கடந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இதையடுத்து தங்கள் காதல் குறித்து குடும்பத்தினரிடம் கூறி, திருமணத்திற்கு ஒப்புதலையும் பெற்றனர்.
இந்தநிலையில் மிண்டி 90 நாட்கள் விசாவில் பாகிஸ்தானுக்கு சென்றபோது வருக்கால கணவர் அவரை இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் வரவேற்று தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். சஜித் செப் கானின் உறவினர்கள் மிண்டிக்கு பரிசு பொருட்களை வழங்கி இருவரையும் வாழ்த்தினர். இதற்கிடையில், மிண்டி ராஸ்முஸ்டன் இஸ்லாம் மதத்திற்கு மாறி, தனது பெயரை சுலேகா என்று மாற்றிக் கொண்டார்.
பின்னர் சுலேகா மற்றும் சஜித் செப் கானுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் திருமணம் முடித்ததும் அந்த பெண் இது குறித்து பேசிய சுலேகா என்ற மிண்டி ராஸ்முஸன், பாகிஸ்தான் மிகவும் அழகான, அமைதியான நாடு என்று குறிப்பிட்டார். தனது குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு மகிழ்ச்சியுடன் முழு ஆதரவு அளித்ததாக குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் கலாசாரம், இயற்கை அழகை நேரில் காண அந்நாட்டிற்கு அனைவரும் நேரில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
English Summary
Love transcends boundaries An American woman has captured the heart of a Pakistani youth