கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக - எடப்பாடி பழனிச்சாமி!
admk eps dmk mk stalin katchatheevu
மீனவர்கள் மீது திமுகவிற்கு எந்த காலத்திலும் அக்கறை இருந்ததில்லை என்றும், அவர்களின் வாக்குகளை பெறவே அக்கறை இருப்பது போல் திமுக நாடகம் ஆடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பயணத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தில் உரையாற்றினார்.
அதில், “இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல திட்டத்தை உருவாக்கியது அதிமுக அரசே. உங்கள் நிலங்களை எந்த ஓர் நிறுவனத்தாலும் கைப்பற்ற முடியாத பாதுகாப்பை ஏற்படுத்தியது நாங்கள்.
50 ஆண்டுகளாக நிலவி வந்த காவிரி பிரச்சனையை தீர்த்து வைத்தது அதிமுக. புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் மக்கள் கஷ்டப்படும்போது, அதிமுக அரசு உடனடியாக களமிறங்கி நிவாரணம் வழங்கியது," என தெரிவித்தார்.
மேலும், "மீன்பிடித் தடைக்காலத்தின்போது வழங்கப்படும் நிதியை உயர்த்தியதும் அதிமுகதான். ஆனால், தற்போது கச்சத்தீவை மீட்போம் எனக் கூறும் ஸ்டாலின், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியே அதை தாரைவார்க்க ஒப்புதல் அளித்தவர்.
திமுக, மீனவர்களை பற்றி உண்மையில் கவலைப்படாத கட்சி. 16 ஆண்டுகள் மத்திய அரசில் இருந்தும், அவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.
இப்போது மட்டும் ஸ்டாலின், மத்திய அரசை குற்றம்சாட்டி, மீனவ சமுதாயத்தின் வாக்குகளைப் பெறத் தந்திரமாக நடிக்கிறார். உண்மையில், மீனவர்களின் நலனுக்காக பாடுபட்டது அதிமுகதான்" என தெரிவித்தார்.
English Summary
admk eps dmk mk stalin katchatheevu