அமெரிக்க அதிபர் டிரம்புக்கு என்ன ஆச்சு..வெள்ளை மாளிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்!
What happened to American President Trump sensational information released by the White House
79 வயதான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு அறிவயவகை நரம்பு சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.அமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார்.அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் ,குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார், அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார், இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்,மேலும் பல நடைமுறைகளை தீவிர படுத்திவரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு அறிவயவகை நரம்பு சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுவரை அமெரிக்க அதிபராக பதவி வகித்தவர்களிலேயே நான்தான் மிகவும் ஆரோக்கியமான அதிபர் என்று டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 13 ஆம் தேதி நியூ ஜெர்சியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட டிரம்ப்பின் கால்களில் வீக்கம் இருப்பதை போன்ற புகைப்படம் வைரலானது.அவரது கைகளில் காயம் காயம் காணப்பட்டதுஇதையடுத்து, டிரம்ப்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, டிரம்ப் நாள்பட்ட சிரை குறைபாடு என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். தீவிரமான நரம்பு பிரச்னை எதுவும் இல்லை, அனைத்து பரிசோதனை முடிவுகளும் பாசிட்டிவாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே டிரம்புக்கு இதய செயலிழப்பு, சிறுநீரகப் பிரச்சனை அல்லது வேறெந்த நோய்க்கான அறிகுறியும் இல்லை என்றும் அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகை மருத்துவர் தெளிவுபடுத்தினார்.
English Summary
What happened to American President Trump sensational information released by the White House