உடைந்தது இண்டி கூட்டணி! அதிகாரபூர்வமாக அறிவித்த ஆம் ஆத்மி!
INDI Alliance brake AAP
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஆம் ஆத்மி இண்டி கூட்டணியில் இல்லை என்று அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணியாக போட்டியிட்ட ஆம் ஆத்மி, ஹரியாணா மற்றும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்தனியாகவே போட்டியிட்டது.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், “மக்களவைத் தேர்தல் வரைதான் இண்டி கூட்டணியில் நாங்கள் இருந்தோம். அந்த நிலைப்பாடு ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும், மத்திய அரசின் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கப்போவதாகவும் அவர் கூறினார். “பிகார், உத்தரப்பிரதேசம் மற்றும் பூர்வாஞ்சலில் பலரது வீடுகள், கடைகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து நாங்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளோம்,” எனக் கூறினார்.
மேலும், “எங்களின் கூட்டணி முடிந்துவிட்டது. தற்போது ஆம் ஆத்மி இண்டி கூட்டணியில் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டோம்,” என்றார்.
வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத் தொடரில் டெல்லி குடிசைப் பகுதிகளை இடித்த விவகாரம் எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.