பாலாற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்..குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!
Farmers demanded to prevent dumping of garbage and waste in the river during the grievance meeting
பாலாற்றில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் - மா விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கி மா விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசுகள் மாணியம் வழங்க வேண்டும் வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வேலூர்மாவட்டம்,சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது ,இதில் வேளாண்துறை மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்,
இதில் பாலாற்றில் குப்பைகள் மற்றும் தோல் கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவுகளால் குப்பைகளாலும் பாலாற்றின் குடிநீரும் நிலத்தடி நீரும் மாசடைகிறது குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் மேலும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டுமெனவும் மேலும் மா அதிக விளைச்சல் இருந்தும் தமிழக மாங்காய்களை ஆந்திராவில் இறக்குமதி செய்யாததால் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,
எனவே அவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்குவதுடன் மா விவசாயிகளுக்கு ஆந்திரா கர்நாடகாவில் மாணியம் வழங்குவதை போல் மாணியம் அளிக்க வேண்டும் மேலும் மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுகொண்டனர் அதற்கு மாவட்ட ஆட்சியர் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்க அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக பேசினார்.

பின்னர் ஏரிகளில் மண் கொள்ளையை தடுக்க வேண்டும் நீர் நிலைகளில் உள்ள கருவேல் மரங்களை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாடுகள் விளை பயிர்களை மேய்ந்து விடுவதால் கழனிகள் சாலைகளில் மேய்யும் மாடுகளை பிடித்து உரிய அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்,
English Summary
Farmers demanded to prevent dumping of garbage and waste in the river during the grievance meeting