பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு - ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது!
Gujarath woman police acid attack
குஜராத்தில் பெண் போலீசாரின் மீதான அமிலத் தாக்குதல் (ஆசிட் வீச்சு) நடந்த சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
கலோல் மாவட்டம், சத்ரல் கிராமத்தில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரி, ஒரு ஆட்டோவை வழிவிடுமாறு கேட்டார்.
அதனைத் தொடர்ந்து ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மற்ற போலீசார் தலையிட்டு, அந்த ஆட்டோ ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர், வீட்டிற்குச் சென்று கழிப்பறை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் அமில பாட்டிலை எடுத்துக் கொண்டு, பெண் போலீசாரின் மீது வீசியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், அவர் கை, தோள்பட்டை மற்றும் கழுத்துப் பகுதியில் தீக்காயமடைந்தார். இதனையடுத்து காந்திநகர் சிவில் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய அசோக் என்ற ஆட்டோ ஓட்டுநர் பின்னர் கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Gujarath woman police acid attack