அசோ...! டெட்டானஸ் தாக்கிய பிறகு என்ன செய்வது...? தவறாமல் தெரிந்து கொள்ளுங்கள்...!
What after tetanus attack Be sure to know
நோயை உருவாக்கும் கிருமிகள் :
ஸ்போர் :
ஸ்போர்கள் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் இருக்கும். இவை பல வருட காலங்கள் உயிருடன் இருக்கும். இந்த ஸ்போர்கள் அதிகமான மற்றும் குறைந்த என எல்லா தட்ப வெப்பநிலைகளிலும் உயிர் வாழக்கூடியவை.
பொதுவாக, காயங்கள் டெட்டானஸ் ஸ்போர்களினால் மாசடையும். இருந்தபோதும் டெட்டானஸ் ஸ்போர்கள் முளைத்து செயல்பாடுடைய பாக்டீரியாவாக மாறும் போது டெட்டானஸ் - ஐ தோற்றுவிக்கும்.

செயல்வினை வடிவான பாக்டீரியா :
செயல்வினை வடிவான பாக்டீரியா, டெட்டானோலைஸின் மற்றும் டெட்டானோஸ்பாஸ்மின் எனும் இரண்டு வகை புறநஞ்சினை வெளிவிடுகிறது. டெட்டானோஸ்பாஸ்மின் நோய் தோன்ற இவை முக்கிய காரணமாகும்.
டெட்டானஸ் வந்தபின் காக்கும் முறைகள் :
டெட்டானஸ் நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர வேண்டும். வெளிச்சம் அதிகம் இல்லாத, அமைதியான தனி அறையில் இவர்களுக்குச் சிகிச்சை தரப்படும்.
முதலில் தசை இறுக்கத்தைக் குறைக்கவும், உறக்கத்துக்கும் சிகிச்சை தரப்படும்.
English Summary
What after tetanus attack Be sure to know