உப்பனாரு மழைநீர் வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி..MLA நேரு ஆய்வு!
The salinity drainage of rainwater will come from the channel MLA Nehrus inspection
உப்பனாரு மழைநீர் வடிகால் வாய்க்காலில் கொட்ட பட்டுள்ள மண் சேறு மற்றும் குப்பை போன்ற கழிவுகளை அகற்றி மழை நீர் எளிதாக கடலில் சென்று கலக்குமாறு பணிகள் மேற்கொள்ளுமாறு சட்டமன்ற உறுப்பினர் நேரு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட காமராஜர் சாலை - மறைமலை அடிகள் சாலை இடைப்பட்ட உப்பனாரு மழைநீர் வடிகால் வாய்க்கால் மேல் தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதற்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்காக தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது மழை காலம் தொடங்க இருப்பதால் வாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள மண்ணை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக உருளையன்பேட்டை பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடரும் முயற்சியின் காரணமாக வாய்க்கால் மேல் தற்காலிக சாலை அமைக்கும் பணிகளுக்காக கொட்டப்பட்டுள்ள மண்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்த பணிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்...
17.09.2025... இன்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் திரு.வீரசெல்வம் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்...
ஆய்வின் போது வாய்க்காலில் கொட்ட பட்டுள்ள மண் சேறு மற்றும் குப்பை போன்ற கழிவுகளை அகற்றி மழை நீர் எளிதாக கடலில் சென்று கலக்குமாறு பணிகள் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்... மேலும் ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் திரு.சீனிவாசன் மற்றும் பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.
English Summary
The salinity drainage of rainwater will come from the channel MLA Nehrus inspection