‘ஜி.எஸ்.டி. சீர்திருத்தம்..பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும்..சொல்கிறார் நிர்மலா சீதாராமன்! - Seithipunal
Seithipunal


ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சத்தில் இருந்து 1.51 கோடியாக உயர்ந்துள்ளது.”என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி 4 அடுக்கு ஜி.எஸ்.டி. 2 அடுக்காக குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த வரி குறைப்பு மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு வருகிற 22-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. வெறும் 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் வரி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. 

இந்த நிலையி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் குறித்த விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

“இரண்டு அடுக்குகள் (5 சதவீதம் மற்றும் 18 சதவீதம்) மட்டுமே கொண்ட புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால், பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும். மக்கள் கையில் பணத்தின் இருப்பு அதிகரிக்கும்.

ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு முன், மத்திய அரசு 5 அம்சங்களை கவனத்தில் கொண்டிருந்தது. அவை, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரி விகிதத்தைக் குறைத்தல், நடுத்தர வர்க்கத்தினரின் நலன்களை நிறைவேற்றுதல், விவசாய சமூகத்திற்கு பயனளித்தல், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பயனளித்தல், வேலைவாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி திறனை உருவாக்கும் தொழில் துறைகளுக்கு பயனளித்தல் ஆகியவை ஆகும்.

2017-18ம் நிதியாண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வருவாய் 2025-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்தது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சத்தில் இருந்து 1.51 கோடியாக உயர்ந்துள்ளது.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

GST reform An investment of Rs. 2 lakh crore will occur in the economy says Nirmala Sitharaman


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->