கன்னியாஸ்திரி தூக்குப்போட்டு தற்கொலை..பிரார்த்தனை கூடத்தில் அதிர்ச்சி!
A young woman hung herself in the prayer room, shocking everyone
கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா பிரார்த்தனை கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.அவர் கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடத்தில் மதுரையை சேர்ந்தவர் மேரி கொலாசிஸ்கா சேவையாற்றி வந்தார்.33 வயதான இவர் இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் மடத்தில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் மேரி கொலாசிஸ்கா தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக கன்னியாஸ்திரிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி மேரி கொலாசிஸ்கா பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேரி கொலாசிஸ்காவை சந்திக்க அவரது உறவினர்கள் வந்துள்ளனர். அவர்கள் வந்து சென்ற பிறகுதான் மேரி கொலாசிஸ்கா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . பின்னர் அவரது உடலை கைப்பற்றிய கொல்லம் போலீசார் உறவினர்களுக்கும், இந்த தற்கொலை சம்பவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா கைப்பட எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஆனால் அதில் உள்ள விவரங்கள் குறித்து போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர்.மேலும் இந்தசம்பவம் குறித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.கன்னியாஸ்திரி மேரி கொலாசிஸ்கா பிரார்த்தனை கூடத்தில் தூக்கில் தொங்கிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A young woman hung herself in the prayer room, shocking everyone