3 மாதங்களில்  37 பேர் சாவு..தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தஞ்சாவூர் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர் குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கடந்த ஜூன் 12 -ந் தேதி மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. விவசாய பாசனத்திற்கு மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் மேட்டுர் அணை திறக்கப்பட்டது.இந்த நாட்களில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் ஆற்றில் மூழ்கி 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியிடுள்ளார். இதில் பெரியவர்கள் 28 பேர், ஒரு குழந்தை, பள்ளி மாணவர்கள் 3 பேர், கல்லூரி மாணவர்கள் 5 பேர் என மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோக சம்பவங்களில் பெரும்பாலும் நீர்நிலைகளில் நீச்சல் தெரியாதவர்கள் கவனக் குறைவாக ஆழமானபகுதிக்கு சென்று நீரில் முழ்கும் நிலை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார் .அதுமட்டுமல்லாமல்  சில நேரங்களில் திடீர் மழை மற்றும் அணை திறப்பு காரணமாக நீர் மட்டம் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் முழ்கும் அபாயமும் உள்ளது. நீச்சல் தெரிந்திருந்தாலும், ஆறுகள், கால்வாய்கள் போன்ற இடங்களில் வேகமான நீர் ஓட்டம், சுழல் ஓட்டம் ஆகியவற்றில் சிக்கி மனிதர்கள் உயிரிழக்கிறார்கள் என மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகளில் செல்பி எடுப்பது, நண்பர்களுடன் ஆற்றின் கரைகளில் விளையாடுவது மற்றும் செல்லப்பிராணிகளை குளிக்க வைப்பது போன்ற செயல்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறித்தியுள்ளார் . எனவே, மதிப்புமிக்க மனித உயிர்களின் அவசியம் கருதி ஒவ்வொருவரும் தமது குடும்பம் மற்றும் சமுதாய பொறுப்பை உணர்ந்து நீர்நிலைகளுக்கு தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமார் . இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

37 people died in 3 months shocking incident that happened in Thanjai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->