திமுகவிடம் எந்தக் கட்சியும் ஆட்சியில் நாங்க பங்கு கேட்கவில்லை - எம்.பி நவாஸ்கனி!
DMK Alliance MP
ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி, திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் கூட்டணி ஆட்சி குறித்து இதுவரை பேசவில்லை எனத் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக தலைமையிலான கூட்டணி நிலையான மற்றும் தெளிவான நோக்குடன் இயங்குகிறது.
எந்தக் கட்சியும் இதுவரை கூட்டணி ஆட்சி அல்லது தலைமை குறித்து விவாதித்ததில்லை. எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்” என்றார்.
அதிமுக-பாஜக கூட்டணியைப் பற்றி அவர் கூறுகையில், “அந்த கூட்டணியின் நிலைத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. கீழ்மட்ட தொண்டர்களிடையே ஒற்றுமை இல்லை.
பாஜகவோடு அதிமுக இணைந்து செயல்படுவது நிர்பந்தத்தின் பேரில்தான். அந்த கூட்டணியை தமிழக மக்கள் ஏற்கவே மாட்டார்கள்,” என்றார்.
மேலும், “தற்போதைய காவல் துறை முறையாக இயங்கி வருவதால், ஊடகங்களில் வெளியாகும் குற்றச்செயல்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது ஆட்சியின் செயல் திறனை எடுத்துக்காட்டுகிறது,” என்றும் நவாஸ்கனி கூறினார்.