மு.க. முத்து உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய CM ஸ்டாலின்!
MK Muthu death CM Stalin Condolence
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், திரைப்பட நடிகருமான மு.க. முத்து (வயது 77), உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இன்று காலை, அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று தமது சகோதரருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
முதல்வருடன், திமுக அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், மக்களவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மு.க. முத்துவுக்கு மரியாதை செலுத்தி வருகை தந்துள்ளனர்.
தொடர்ந்து, அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க. முத்து, கருணாநிதி மற்றும் அவரது முதல் மனைவி பத்மாவதி தம்பதியருக்கு பிறந்த ஒரே மகன். தமிழ் சினிமாவில் "அணையா விளக்கு", "பூக்காரி", "பிள்ளையோ பிள்ளை" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் எழுதிய மற்றும் பாடிய பாடல்களாலும் வரவேற்கப்பட்டவர்.
பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதியின் மகனாகவும், கலையுலக வாரிசாகவும் திகழ்ந்தார்.
English Summary
MK Muthu death CM Stalin Condolence